முதற் பக்கம்













தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருக,

யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம்.


தமிழ்க் கட்டுரைகள்: 1,21,995





  • தமிழ்

  • பண்பாடு

  • வரலாறு




  • அறிவியல்

  • கணிதம்

  • தொழில்நுட்பம்




  • புவியியல்

  • சமூகம்

  • வலைவாசல்கள்
















முதற்பக்கக் கட்டுரைகள்



Anton Chekhov with bow-tie sepia image.jpg

ஆன்டன் செகாவ் (1860–1904) புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படும் ஓர் உருசிய எழுத்தாளர் ஆவார். நாடக ஆசிரியராக இருந்து படைத்த, கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் அவரது சிறந்த சிறுகதைகள் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் தனி மரியாதையை ஏற்படுத்தின. செகாவ் தனது இலக்கியப் பயணத்துடன் கூடவே, மருத்துவப் பணியையும் மேற்கொண்டு வந்தார். செகாவின் நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், "நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்" கொடுத்தன. இவரது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும்...




Battle for Palm Tree Hill.jpg

எயித்தியப் புரட்சி (1791–1804) கரிபியனில் உள்ள பிரெஞ்சுக் குடியேற்ற நாடான செயிண்ட் டொமிங்குவில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் எயிட்டி ஆபிரிக்கர்களால் ஆளப்பட்ட முதல் குடியரசாக மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சியாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கிய புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் அமெரிக்காக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்காற்றியது. கரிபியன் தீவுகளின் செல்வச்செழிப்பு ஐரோப்பிய சர்க்கரைத் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த கரும்புத் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். மேலும்...


மேலும் கட்டுரைகள்...




உங்களுக்குத் தெரியுமா?




Nandanar 1935 film.jpg



  • தர்மராஜிக தூபி மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.


  • பக்த நந்தனார் (படம்) பிரபல கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் ஆகும், இது 1935 இல் வெளியானது.


  • லிமாவின் புதையல் 1820 இல் பெருவின் லிமா நகரில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட 208 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதையல் ஆகும்.


  • திரீச்சர் காலின்சு நோய்த்தொகை என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் ஒரு மரபியல் கோளாறு ஆகும்.



தொகுப்பு












செய்திகளில் இற்றைப்படுத்து




Omar al-Bashir, 12th AU Summit, 090202-N-0506A-137 cropped.jpg



  • இலங்கையில் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட 3 நகரங்களில் உயிர்ப்பு ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்புகளில் 46 வெளிநாட்டவர்கள் உட்படக் குறைந்தது 253 பேர் கொல்லப்பட்டனர். 500 பேர் காயமடைந்தனர்.


  • சூடானை கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த அரசுத்தலைவர் உமர் அல்-பசீர் (படம்) இராணுவப் புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  • ஏழாண்டுகளாக இலண்டன், எக்குவடோர் தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்சு நிறுவனர் யூலியன் அசாஞ்சு பிரித்தானியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


  • நியூசிலாந்து, கிறைஸ்ட்சேர்ச் நகரில் இரண்டு பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்.


  • எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 157 பேரும் உயிரிழந்தனர்.



அண்மைய இறப்புகள்: எஸ். முத்தையா - சிலம்பொலி செல்லப்பன்


இந்தியப் பொதுத் தேர்தல், 2019 - பிற நிகழ்வுகள் - விக்கிசெய்திகள்




இன்றைய நாளில்...




Mussolini biografia.jpg

ஏப்ரல் 28:




  • 1503 – செரிஞோலா போர்: வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பிய சமர் ஒன்றில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது.


  • 1758 – இரகுநாதராவ் தலைமையில் மரதர்கள் அட்டொக் (இன்றைய பாக்கித்தானில்) துராணியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.


  • 1920 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.


  • 1944 – இரண்டாம் உலகப் போர்: ஒன்பது செருமனிய கடற்படைப் படகுகள் டைகர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க, பிரித்தானியப் படகுகள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 946 பேர் கொல்லப்பட்டனர்.


  • 1945 – இரண்டாம் உலகப் போர்: பெனிட்டோ முசோலினியும் (படம்) அவரது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


  • 2000 – இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.


  • 2005 – இலங்கை ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.


அண்மைய நாட்கள்: ஏப்ரல் 27 – ஏப்ரல் 29 – ஏப்ரல் 30


தொகுப்பு










சிறப்புப் படம்







Basil-cathedral-morning.jpg

புனித பசில் பேராலயம் உருசியத் தலைநகர் மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும். கசான், அசுத்திரகான் நகரங்களைக் கைப்பற்றப்பட்டதன் நினைவாக இக்கோவில் உருசியப் பேரரசர் நான்காம் இவானின் ஆணைப்படி 1555 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1561 இல் முடிக்கப்பட்டது. 1600 இல் பேரரசர் இவான் நினைவு மணிக்கூண்டுக் கோபுரம் கட்டப்படும் வரை இக்கட்டடமே மாஸ்கோவின் உயர்ந்த கட்டடமாக இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஒரு நடுவில் உள்ள தேவாலயத்தைச் சுற்றிவர எட்டுக் கோவில்கள் கட்டப்பட்டன. பத்தாவது கோவில் 1588 இல் வசீலி என்ற புனிதரின் சமாதி மீது கட்டப்பட்டது. 1930களில் போல்செவிக்குகள் இக்கோவிலை இடிக்கத் திட்டமிட்டபோதும், பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. 1991 முதல் அரச வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் இடையிடையே தேவாலய வழிபாடுகளும் நடைபெறுகின்றன.


படம்: அ. சாவின்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்









  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.


  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.


  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.


  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.


  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.









Wbar white.jpg

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்

விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:






































விக்கிப்பீடியா மொழிகள்








Popular posts from this blog

GameSpot

日野市

Tu-95轟炸機